Monday, July 21, 2025

பெரியவா சரணம்

 பெரியவா சரணம்

பாடல்: பாலசாண்டில்யன்
ராகம் : சஹானா
புன்னகை ஒன்று போதாதா
புவனமுழுதும் அது போதனை தாராதா (புன்னகை)
தன்னிகரில்லா தவ ஞான ஜோதியே
தந்து நின்றாய் என்றும் அன்பர்க்கு நற்கதியே (புன்னகை)
வந்து தொழும் அடியவர்க்கருளை
வாரி வழங்கிய வள்ளல் பெருந்தகையே
சந்திரசேகர சரஸ்வதியே குருவே
சன்மத ஸ்தாபக நாயகனே - உன் (புன்னகை)
அன்பு நெறி ஆன்மிகம் தழைத்திட
அரிய நல் யாகம் செய்த தவப் பயனே
மண்ணில் பிறந்துதித்த மாமுனியே - குருவே
மாணிக்கமே சிவ ரூபனே - உன் (புன்னகை )

No comments:

Post a Comment