தர்மமும் உதவியும் செய்ய
முன்வரவில்லை கைகள் - மனம்
தாங்கொணா பாவங்கள் செய்ய தவறவில்லை செய்கைகள்
இது பொறுத்தருள இயலா கலி காலம்
என் செய்ய
இறைவனே சாட்சி பூதம் யாரென் செய்ய
ஏமாற்றுக்காரர்கள் திருடர்கள் கொள்ளையர்கள்
இயங்கிடும் மிக மோசமான பெருங்காலம்
மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்
இல்லை நேரம்
வெட்கமற்ற பிடிவாதக் காரர்களின் அலங்கோலம்
பொய்யர்களின் காலம் மோசக்கார்களின் காலம்
நல்லவர்கள் வல்லவர்களுக்கு இல்லை இக்காலம்
அடிமைகளாக வாழும் உலகில் அன்புக்கில்லை காலம் - பெற்ற
அன்னைக்கே வந்த சோதனைக் காலம்
என் செய்ய
பொய் தான் ஆனது இங்கே மெய் அய்யோ
வீணரால் பயனுள்ள பொருளும்
வீணென ஆனது
மருமகளே மாமியாரை தண்டிக்கும்
நவீன காலம்
உண்மையை போற்றும் மனிதருக்கு இல்லை இக்காலம்
(தர்மக்கே கை பாரதி கால - புரந்தரதாசர் பாடலின் சாராம்சம்)
முயற்சி : பாலசாண்டில்யன்
Listen to Dr Balamurali ji for the expression and feelings
No comments:
Post a Comment