"தேரே ஹவாலா கர்தியா"
பாடலின் பிரதிபலிப்பு தமிழில்
முயற்சி: பாலசாண்டில்யன்
காதல் செய்த மாயம்
எனதெண்ணம் முற்றிலும்
மாறாமல் உன் வண்ணம்
ஆனதென்ன புது மாயம்
தேகமும் அங்கமும் ஒன்றறப்
பின்னிப் பிணைந்துள்ளன
தேக சங்கமத்தில் நான்
தெய்வத்தை நேரில் கண்டேன் களித்தேன்.. நெகிழ்ந்தேன்
நீங்கள் நேரில் இல்லை
நீங்கி வேறிடமிருந்தாலும்
அருகில் தானென உணர்ந்தேன்
நீ வரும் வேளைக்கு என்னோடு
நூறு உயிர்கள் காத்திருந்தன...
என்னிடமுள்ள தனைத்தும்
உன்னிடம் ஒப்படைத்தேன் என்தன்பே
எனதுடலின் ரோமக்கால்கள் கூட
உன் வசமானதென் அன்பே அழகே
என்னிடமுள்ள தனைத்தும்
உன்னிடம் ஒப்படைத்தேன் என்தன்பே
என் ரோமக்கால்களில் கூட
உனக்கு உரிமையளித்தேன் வா
உன்னை மட்டுமே பார்த்து விட்டு
உலகையே பார்த்ததாய்ச் சொல்வது தவறு... என்றாலும் கூட
காதலென்பது பக்தி
அன்புயென்பது கருணை
உன் வாசல் தான் எனக்கு
பாதுகாப்பான புகலிடம்..
நான் மதிற்சுவரெனில்
நீயே இல்லத்தின் மேற்கூரை
கடவுள் தந்த புதுவரம் நீ.. எனக்கு
அதிர்ஷ்டம் கொணரும் தாயத்து..
என் கண்களால் உனைக் காண
என்றாவது முயற்சித்துப் பார்..
நிலவில் கூட களங்கம் உண்டு
நீ குறைகளற்றவள் அல்லவா...
என் மீதான உரிமையை நானே
உனக்களித்தேன் புரிந்த தல்லவா
என்னிடமுள்ள தனைத்தும்
உன்னிடம் ஒப்படைத்தேன் என்தன்பே
என் எண்ணம் முற்றிலும் இப்போது
உன் வண்ணம் காதல் செய்தமையால்
தேகமும் அங்கமும் ஒன்றறப்
பின்னிப் பிணைந்துள்ளன..
தேக சங்கமத்தில் நான்
தெய்வத்தை நேரில் கண்டேன்
களித்தேன் நெகிழ்ந்தேன்...
என்னிடமுள்ள தனைத்தும்
உன்னிடம் ஒப்படைத்தேன் என்தன்பே
No comments:
Post a Comment