கணபதி பாப்பா மோரியா - பாலசாண்டில்யன்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
-ஒளவையார்
நமக்குத் தமிழ் தந்து அருள்பவன் விநாயகன் தான் என்று ஒளவையார் பிராட்டி கூறுகிறார்.
முருகனுக்கு அரோகரா என்பது போல பிள்ளையாருக்கு ‘கணபதி பாப்பா மோரியா’ என்கிற கோஷம் மிகவும் பிரபலம் எனலாம்.
திருப்புகழ்பாடிய அருணகிரிநாதர் பாடிய இந்தப் பாடலில் மட்டுமே விநாயகரைக் குறிப்பிடுகிறார்என்பது இங்கே விசேஷமான செய்தி.
“கைத்தலநிறைகனி அப்ப மொடு அவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிகற்றிடும்அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்மத்தமும்மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானைமத்தளவயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனேமுத்தமிழ்அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனேமுப்புரம்எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீராஅத்துயர்அது கொ(ண்)டுசுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகிஅக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. “
"கரதலத்தில்நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானைமுகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள்யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும்,மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன்துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டுநான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும்முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள்முற்பட்டதான மேரு மலையில் முதல்முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்தஅந்தச் சிவ பெருமான் எழுந்தருளியரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே, (வள்ளி மீது கொண்ட காதலாகிய)அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன்நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன்அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம்புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே. " என்பது இந்தப் பாடலின் பொருள்.
விநாயகருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், வாதாபி கணபதி, நடன கணபதி, நர்ததன கணபதி, தும்பிக்கை ஆழ்வார் போன்ற பல பெயர்கள் உள்ளன. கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும், யானை முகம் கொண்டவர் என்பதால் ஆனைமுகன் அல்லது கஜமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவருடைய வேறு பெயர்கள் மற்றும் அவை குறிக்கும் பொருள்:
கணபதி: கணங்களுக்கு அதிபதி (தலைவர்).
ஆனைமுகன் / கஜமுகன்: யானை முகம் கொண்டவர்.
ஏகதந்தன்: ஒரு தந்தம் உடையவர்.
லம்போதரன்: பெரிய வயிறு உடையவர்.
ஹேரம்பன்: அன்னை பார்வதிக்குப் பிரியமானவர்.
தும்பிக்கை ஆழ்வார்: வைணவர்களால் வழங்கப்படும் பெயர்.
நடன கணபதி/நர்ததன கணபதி: நடனமாடும் விநாயகர்.
கஜானனன்: யானை முகம் உடையவர்.
ஒற்றைக்கொம்பன்/ஒற்றைமருப்பினன்
அங்குசதாரி/அங்குசபாசதரன்/அங்கு
பரசுபாணி: மழு ஆயுதம் வைத்திருப்பவர்.
கங்கைபெற்றோன்: கங்கை நதியால் பெற்ற குழந்தை எனப் பொருள் கொள்ளலாம்.
துண்டிராஜன்: துண்டிரா என்ற பெயருடன் தொடர்புடையவர்.
வாதாபி கணபதி: ஒருவகை விநாயகர் சிலை.
கல்வி கணபதி: கல்வியில் சிறந்து விளங்க வைக்கும் விநாயகர்.
அரசமரத்தடி பிள்ளையார்: அரசமரத்தின் கீழ் உள்ள விநாயகர்.
பிள்ளையார்: பொதுவாக விநாயகரைக் குறிக்கும் பெயர்
விநாயகருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், வாதாபி கணபதி, நடன கணபதி, நர்ததன கணபதி, தும்பிக்கை ஆழ்வார் போன்ற பல பெயர்கள் உள்ளன. கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும், யானை முகம் கொண்டவர் என்பதால் ஆனைமுகன் அல்லது கஜமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
முருகனை நாம் தமிழ்க்கடவுளாக கொண்டாடி வணங்கும் நேரத்தில் அவனின் அண்ணன் விநாயகன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார்.
மற்ற நாடுகளில், சமஸ்கிருதத்தில் விநாயகர் என்று அழைக்கப்படும் விநாயகர், வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார், மேலும் பல்வேறு வடிவங்களிலும் வழிபடப்படுகிறார். தாய்லாந்தில், அவர் ஃபிரா பிகானெட் அல்லது ஃபிரா பிகனேசுவான் என்று அழைக்கப்படுகிறார். ஜப்பானில், அவர் காங்கிடென் அல்லது கணபாச்சி என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் முதன்மையாக குறிப்பிட்ட பௌத்த பள்ளிகளில் போற்றப்படுகிறார். சீனாவில், அவர் ஹுவான்சி தியான் என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீராமநவமி என்பது நவமி திதியில் வருகிறது. கோகுலாஷ்டமி என்பது அஷ்டமி திதியில் வருகிறது. அதுபோல சதுர்த்தி திதியில் வருகிற விநாயகர் சதுர்த்திஎன்பது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். இது விநாயகப் பெருமானின்பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த விழா ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகரின் பிறப்பு மற்றும் சிறப்புகளை நினைவு கூர்ந்து கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் வரலாறு மிகவும் நீண்டது. இது மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டுவந்தாலும், பாலகங்காதர திலகர் இதை ஒரு தேசிய விழாவாக மாற்றியமைத்தார். இவர் பிரிட்டிஷ்ஆட்சியின்போது தேசிய உணர்வை வளர்ப்பதற்காக இந்த விழாவைப் பயன்படுத்தினார். அவர் விநாயகர்சதுர்த்தியை ஒரு சமூக நிகழ்வாக மாற்றி மக்களை ஒன்று திரட்டினர்.
நாடெங்கிலும் (ஏன் உலகெங்கிலும் விநாயக சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி போல நிறைய நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஒரு மீசை வரைந்தால் பாரதி என்பது நினைவுக்கு வரும். ஒரு கண்ணாடியை வரைந்தால் காந்திஜி நினைவுக்கு வருவார். ஒரு வளைவுக்கோடு போட்டாலே அது விநாயகரை நினைவுபடுத்தும். ஒரு பிள்ளையார் சுழி போடாமல் நாம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதில்லை. விநாயகர் வெற்றியின் மறுபெயர் எனலாம். எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது.
விநாயகர்சதுர்த்தியின் வரலாறு:விநாயகர்சதுர்த்தி விழா, புராணங்களின்படி, பார்வதி தேவி தன் உடலில்இருந்து களிமண்ணால் ஒரு சிலையை உருவாக்கி,அதில் உயிரூட்டி, விநாயகரை உருவாக்கினாள்.ஒருமுறைபார்வதி குளிக்கச் சென்றபோது, விநாயகர் வாசலில் காவலிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த சிவபெருமான் விநாயகரால்தடுக்கப்பட்டதாகவும், இதனால் சிவன் கோபமடைந்து விநாயகரின் தலையை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.பின்னர்,பார்வதி தேவியின் துயரைக் கண்ட சிவன், விநாயகரின்தலையை யானையின் தலையை வைத்து ஒட்டவைத்து, அவரை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும்கூறப்படுகி
சிவன்,விநாயகருக்கு 'கணங்களின் தலைவன்' என்ற பட்டத்தை அளித்தார்.அதிலிருந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
ஒரு அற்புதமான கவிதை நினைவுக்கு வரும் :களிமண்ணெல்லாம் கடவுள் ஆச்சு. காசும் ஆச்சு. விற்காத கடவுள் எல்லாம் மீண்டும் களிமண் ஆச்சு. (ஆம் பண்டிகை மத்தியான நேரமே முடிந்து விடும். அதற்குப் பிறகு யாரும் பிள்ளையார் சிலையை யாரும் வாங்க மாட்டார் அல்லவா?)
விநாயகர்சதுர்த்தி கொண்டாட்டம்:இந்த விழாவின் வரலாறுபண்டைய காலத்தினுடையது என்றாலும், இன்று நாம் கொண்டாடும் விநாயகர்சதுர்த்தி காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. விநாயகர்சதுர்
பல இடங்களில், ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பார்கள். சென்னையில் இதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி கடற்கரை சென்று பிள்ளையாரை கரைத்து விட்டு ‘அடுத்த ஆண்டு மீண்டும் வருக’ என்று வேண்டிக்கொள்ளுவர். நிச்சயமாக இதற்கு காவல்துறை பாதுகாப்பு மிகவும் பலமாக இருக்கும். காரணம், போகிற வழிகளில் சில சமயங்கள் கலவரங்கள் ஆனது உண்டு.
இந்தநாளில், மக்கள் ஒருவருக்கொருவர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள்.
இங்கே ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல விநாயகப் பெருமானுக்குஎட்டு இடங்களில் பிரசித்தி பெற்ற கோயில்கள் உண்டு. அஷ்டவிநாயகர் கோயில்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே நகரைச் சுற்றிஅமைந்துள்ளன. குறிப்பாக, இந்த எட்டு விநாயகர்கோயில்களும் புனே மாவட்டத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன. அஷ்ட விநாயகர் கோயில்கள்மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ளன: மோர்ஷேவர் (Moreshwar): தேவுர்(Theur)சித்
தக்டுசேட் கணபதி, புனே மகாராஷ்டிராவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாக அறியப்படும் தக்டுசேட் கணபதி கோயில் புனேவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதுடன், இக்கோயிலின் விநாயகர் சிலை ரூபாய் 1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் பிரபாதேவி என்ற இடத்தில் அமைந்துள்ள 'சித்தி விநாயக்' கோவில் (சச்சின் டெண்டுல்கரின் மிகவும் பிடித்த கோவில் இது எனலாம்) மிகவும் பிரசித்தி பெற்றது, நமது பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலைப்போல. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மிகவும் சக்தி வாய்ந்தவர். பாண்டிச்சேரி மணக்குள விநாயகரை மறக்க முடியாது. எப்போதும் அங்கு கூட்டம் உண்டு. இந்த கோவில்களில் எல்லாம் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
மஞ்சளில் பிடித்து வைத்தாலே பிள்ளையார் தான். ஒவ்வொரு தெருவிலும், சாலைகளின் நடுவிலும், அலுவலகங்களிலும், அடுக்கு மாடி கட்டிடங்களிடலும் விநாயகர் உண்டு. தூணிலும் துரும்பிலும் நாராயணன் இருப்பார் என்பது போல விநாயகர் இல்லாத இடமே இல்லை எனலாம்.
விநாயகர் சிலைகள் பல்வேறு வகைகள் உள்ளன. வெட்டிவேர் விநாயகர், வெள்ளெருக்கு விநாயகர், குபேர விநாயகர், பாதரச விநாயகர், நவதானிய விநாயகர், தேங்காய் விநாயகர், மரகத விநாயகர் முதலியன. வெட்டிவேர் விநாயகரை வழிப்பட்டால் கண் திருஷ்டி நீங்கும் மற்றும் தீயசக்திகள் அண்டாது. வெள்ளெருக்கு வேரினால் செய்த விநாயகரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். காரியத் தடைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிகள் குவியும். குபேர விநாயர் இருக்கும் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும். அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் சக்தி குபேரருக்கு உண்டு என்பது ஐதீகம். பாதரச விநாயகரை வழிப்பட்டால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். நவதானிய விநாயகர் இருக்கும் வீட்டில் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது நம்பிக்கை. நவதானிய விநாயகரை வழிபடுவதால் வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சம் நிறையும்.
சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது நம் பாரம்பரிய வழக்கமாகும். ஏனெனில், தேங்காயை தரையில் அடித்து உடைக்கும் போது அது உடைந்து சிதறி ஓடுவது போல், நம் தோஷங்களும், பாவங்களும் நம்மைவிட்டு சிதறி ஓடும். மரகத விநாயகரை வழிப்பட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் பதவியில் அமரும் யோகம் உண்டாகும் மற்றும் பண வரவு அதிகரிக்கும்.
சிறுவயது முதல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பண்டிகை விநாயகர் சதுர்த்தி தான்.
பிள்ளையார் சிலைகள் மற்றும் பொம்மைகளை வீட்டில் நிரந்தர கொலு போல வைத்திருக்கும் சென்னையின் முக்கியப் பிரமுகர்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி அவர்களின் இல்லம் மற்றும் அலுவலகம், கர்நாடக இசையரசி சுதா ரகுநாதன் அவர்களின் இல்லத்திலும் இப்படியான கொலு உண்டு. எழுத்தாளர்களில் பிரபலமாக விளங்கும் டாக்டர் பாஸ்கர் ஜெயராமன் அவர்களின் கிளினிக்கிலும் ஒரு பிள்ளையார் கொலு உண்டு.
நீங்களும் ஒவ்வொரு ஆண்டும் (தினந்தோறும்) விநாயகரை வழிபட்டு வெற்றி அடையுங்கள். பிரைன் ஜிம் யோகா எனப்படும் தோப்புக்கரணம் (தோர்பிஹிகரணம் ) செய்து தான் பிள்ளையாரை வழிபட வேண்டும். கீழே விழுந்து நமஸ்கரித்து அல்ல. உங்களுக்கு வெற்றிகள் நாளும் கிடைக்க இந்த 'பாலசுப்ரமணியனின்' வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment