Tuesday, July 22, 2025

காலம் சொல்லும் பதில்

 காலம் சொல்லும் பதில்

காற்றுக்கு மரமுண்டு
நீருக்கு வானுண்டு
நெஞ்சுக்கு நீயுண்டு
சுகந்தான் அன்பே
தமிழுக்கு உரமுண்டு
தழுவிட கரமுண்டு
தாமதம் செய்யாது
அருகே வா முன்பே
எந்நாளும் நன்னாளே
இருளென்றும் நீளாது
சஞ்சலமேன் கண்ணே
நன்மைபல செய்து விட
துன்பங்கள் மாறும்
கலவரம் இனியேது
எண்ணங்கள் வரும்போகும்
எழுந்திரு இனிதாக
காற்றும் மழையும்
எல்லோர்க்கும் ஒரு சுகம்
காடும் மரமும்
கண்களுக்கு புது வரம்
நில்லாது சுழலும் பூமி
நிம்மதி தரும் சாமியே
கம்பியிட்டு தடுத்தாலும்
காதல் மாறாதம்மா
காலம் பதில் சொல்லுமே
கல்லுக்குள் கடவுளுண்டு
கணமொன்றில் புரிந்தால்
கவலைகள் பறந்தோடும்
கனவுகள் நனவாகுமே
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment