உன்ன நம்பி ஒலகத்தய எதுத்தேன்
பிரிஞ்சிக்க நெனைக்காதே புரிஞ்சிக்க
வலைத்தளமும் தேடலும் போல இருக்க
சேர்ந்தே பிறந்தவங்க நாம் ஒன்னுசேர
இழுக்கும் மூச்சே மூச்சுக் காத்தே (உன்ன)
காச்சலுக்கு மாத்திரை நீ தானே
கூச்சலுக்கு யென்துணை நீ தானே
பேச்செலாம் உம்பேரு வேறென்ன
பேருக்குத் தானே என்பேரு நானென்ன (உன்ன)
முடிவுதான் நீயின்னா முதல்ல யென்
முகத்தில படலியே மனசுல வரலியே
முதல்ல பாத்தது யாருன்னு தெரியல
முகமும் முகவரியும் இப்போ நீதான் (உன்ன)
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment