Sunday, November 2, 2014

My Recent poems

மூடிய கைத்துண்டுக்குள்
முடிந்து போகும் பேரம்
மாறி இடம் பெயர்வது 
கால்நடைகள் !
தேடிய வலைவீச்சுக்குள்
முடிந்து போகும் வரன்
மாறி குடி பெயர்ந்திட
கல்யாணங்கள்.....!!
இரு வேறு சந்தைகள்...!!
இடம் மாறும் விந்தைகள்!!
-
பாலசாண்டில்யன்
கண்ணில் படுவது நேசம்
கலங்கி நிற்கும் சுவாசம்
யார் அறிவார்?!
முகர்ந்து அறிவது வாசம்
கசங்கி மடிந்தன வாசமலர்கள்
யார் அறிவார்?!
கண்ணில் படுவது வெற்றி
கலைந்து போன உறக்கம்
யார் அறிவார்?!
-
பாலசாண்டில்யன்

மழையில் வந்த மகளிடம்
அடி நனைந்தாயா 
இந்தா துண்டு என்றேன் 
அவளோ....என்
அடினியம் செடி
நனைகிறது பார் 
உள்ளே கொண்டு வா என்றாள்
-
பாலசாண்டில்யன்
அமைதியான குளத்தில் 
சிறியதோர் கல்
விழுந்தாலும்
வட்டங்கள் தோன்றும்...
அமைதியான மனமும்
அப்படியே...!
கலங்காதிருப்பது நம் கடன்...திறன்
-
பாலசாண்டில்யன்
பிரியம்
உள்ள உள்ளங்கள்
பிரியாது
பிணைந்திருக்கும்
- பாலசாண்டில்யன்
நீங்கள் கொடுப்பவர் என்றால்
ஆஹா...
நீங்கள் கெடுப்பவர் என்றால்
ஸ்வாஹா...
சம தர்மம்
-------------
'கண்'டிராவி நோய்கள்

கடவுள் போலத்தான்
இன மத பேதம்
கிடையாது...!
மேலோர் கீழோர்
வித்தியாசம் தெரியாது...!
பிடித்தவரை கைவிடாது..!
வழங்கியது யார் ?! 
'தெரியாது'

வாங்கிக் கொண்டேன்....
சென்'eye'...!!
வார்த்தை உயரட்டும்...
குரலல்ல.
மழை தான் மலர் கொணரும்...
இடியல்ல....
- பாலசாண்டில்யன்
சந்திக்கும் சவால்கள் எல்லாம்
ரயில் நேரப்பயணத்தில் 
ஜன்னல் வழிக் காட்சி
போலத்தான். 
கண்முன் பெரிதாகவும்
கடந்த பின் சிறிதாகவும் 
தெரியும் மரங்கள் தான்..
கவலை ஏன்...?!
-
பாலசாண்டில்யன்.


No comments:

Post a Comment