Saturday, November 2, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 1

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி
:"பெரிய மணியை ஒலிக்கச் செய்"
அந்தக் காலத்தில் அரண்மனைக்கு வெளியே ஓர் ஆராய்ச்சி மணி வைத்திருப்பார்கள். யாருக்கேனும் ஏதாவது புகார் இருந்தால் அதனை ஒலிக்கச் செய்வார்கள். அது கேட்டு அரசர் அவரை அழைப்பர்.
இப்படி கோவில்களில், சர்ச்களில் இருக்கும். பிரார்த்தனை நேரத்தில் அவை ஒலிக்கும். சிலர் குதித்து எப்படியாவது அதனை அடித்தால் தனக்கு அதிர்ஷ்டம் உண்டு என நம்பி அடிப்பர்.மணி ஒலித்தால் அரசன் காதிலோ ஆண்டவன் காதிலோ கேட்கும் என்று நம்பி மனிதர்கள் மணியை ஒலிக்கிறாரக்ள்.
இப்போது 'பெரிய மணி' என்பதை தங்கள் அழைப்பாக, உதவிக்கு அழைப்பாக, அறிவிப்பாக நினைத்துப் பாருங்கள்.
வேகமாக வாசலில் ஒலி கேட்டால் ஐஸ் கிரீம் வந்து விட்டதாக குழந்தைகள் ஓடுவர்.
அது போல உங்கள் புதிய திட்டங்கள், புதிய நிறுவனம், புதிய ஐடியாக்கள் இவற்றை உலகிற்கு தெரிவிக்க இப்போதெல்லாம் 'பெரிய மணி' என்பது சமூக வலைத்தளங்கள் மூலம் சொல்லுவது தான். எப்படி பிறரை கவர்ந்து உங்கள் பக்கம் இழுப்பது, வணிகத்தைப் பெருக்குவது, வாடிக்கையாளர்களை கவர்வது என்று சிந்தியுங்கள்.
என்ன பெரிய மணியின் கயிறு கையில் பிடித்து விட்டீர்களா ? தொடங்கி விட்டது மணி சத்தம் மட்டும் அல்ல. உங்கள் வெற்றியும் தான்.

No comments:

Post a Comment