Saturday, November 2, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 2


 தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி :

1.   ‘காரணம் அறிந்து காரியம் செய்’ 

வாழ்க்கையின் சாரம் தன்னலமற்ற மற்றும் நிச்சயமற்ற செயல்களின் தருணங்களில் உள்ளது. ஒரு காரணமும் இன்றி யாரும் எதையும் செய்வதில்லை. எது செய்தாலும் நமக்கு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கிறது. 

தினமும் பைக்கில் ஆபீஸ் செல்லுகிற ஒருவர் ஆட்டோ பிடித்துப் போனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை அல்லது வெளியே மழை பெய்கிறது. இப்படி ஏதோ ஒரு காரணம் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் இருக்கிறது. 
ஆனால் அதையும் மீறி சில சமயம் சில விஷயங்கள் நடக்கின்றன

உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் வீட்டு அருகில் உள்ள பார்க்கில் வாக்கிங் போகும் போது அங்கே ஒரு குழந்தை உங்களைப் பார்த்து சிரிக்கிறது. அங்கே நாம் காரணம் தேடாமல் அந்தக் குழந்தையைப் பார்த்து பதில் சிரிப்பு விடுவோம். 

இது போன்ற புதிய புத்துணர்ச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை நமக்கு அன்றாடம் தருகிறது. அப்படிப்பட்ட தருணங்களை நமது குறுகிய வாழ்வில் மிக அதிகமாக அனாவிசயமாக பகுத்தறிவு தனை பயன்படுத்தாமல் சரியான நோக்கில் எடுத்துக் கொண்டு அனுபவிப்பது மிகவும் நல்லது. 

அதையும் தாண்டி உழைக்க, வெற்றி பெற, சாதிக்க, செல்வம் ஈட்ட, எளியவர்களுக்கு உதவ என்று சில விஷயங்களுக்கு காரணம் அதிகம் தேடாமல் காரியங்களை தொடங்கினால் நிச்சயம் வெற்றி, சந்தோசம் உறுதி. என்ன சரி என்று தோன்றுகிறதா? அதிக காரணம் கேட்காமல் ஆம் என்று சொல்லுங்கள்

No comments:

Post a Comment