Sunday, November 3, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி :3

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி :
3. "வயது ஒரு எண்ணிக்கையே"
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். இருப்பினும், மனஉறுதியால் வயதை மீறி சாதித்தவர்கள் நிறைய பேர் உண்டு.
கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் என்பவர் தனது 65 வயதுக்கு மேல் கேஎப்சி எனும் சிக்கன் சம்பந்தமான உணவகத்தை தொடங்கி 22600 க்கும் மேற்பட்ட கிளைகளோடு வெற்றிகரகமாக செயல்படுத்திக் காட்டினார்.
கிளாடிஸ் பரில் எனும் 92 வயதுப் பெண்மணி 9 மணி 53 நிமிடங்கள் மாரத்தான் ஓடி வென்று கின்னஸ் சாதனை படைத்தார்.டீச்சி இகரஷி எனும் ஜப்பானியர் தமது 100 வயதில் மிக உயரமான பிஜி மலை ஏறி அதன் உச்சம் தொட்டு சாதனை படைத்துக் காட்டினார்.
தென்னாப்பிரிக்காவின் அதிபராக தேர்வு பெற்றவர் நெல்சன் மண்டேலா. அப்போது அவருக்கு வயது 75.
நம்மூரில் அனைத்து மூத்த அரசியல்வாதிகளும் தமது 65 வயதுக்கு மேல் பற்பல சாதனைகள் செய்துள்ளனர்.
அவ்வளவு ஏன் மிக சாமானியராக வீட்டு வேலை பார்த்து வந்த திருமதி ரமணி அம்மாள் 'ராக் ஸ்டார்' என்று இன்று அறியப்பட்டு ஜீ டிவியில் திரைப்படப் பாடல்கள் பாடி வெற்றி பெற்று பற்பல வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு, பல புதிய படங்களில் பாடி அசத்தி வருகிறார். 
அவருக்கு வயது 64.
நல்ல பழக்கங்கள், சீரான உடற்பயிற்சி, தெளிவான சிந்தனை, நல்ல பண்புகள், யோகா, பிரார்த்தனை என்று சரியாக வாழும் எவருக்கும் வயது ஒரு பொருட்டு அல்ல. அது வெறும் எண் தான். வாழ்க்கையை வயது பற்றிக் கவலைப்படாமல் ஆனந்தமாக வாழ்ந்தால் என்றும் வெற்றி தான். தினம் தினம் சந்தோசம் தான்.

No comments:

Post a Comment