Monday, July 21, 2025

Aaoge jab saajna - Jab we met - In Tamil

 Aaoge jab saajna - Jab we met - படப்பாடல் ஏற்படுத்திய தாக்கம் - இதோ தமிழில் - பாலசாண்டில்யன்

எப்போது நீ வந்தாலும் அன்பே
என் முற்றத்தில் பூப்பூக்கும்
மழை பெய்யும்... மகிழ்ச்சியில்
நடனமாடி மழை பெய்யும்
இரண்டு இதயங்கள்
இணையும் அப்படித்தான்
உன் கண்களின் மை மயக்கிடுமே
அதில் என் மனம் பறிபோகுமே
உனையறியாமல் உன் விழிகள்
உறுதிகள் அள்ளித் தருமே...
சுவாசம் மெல்ல நகருமே அட
அது முனகிடும் இதைத்தான்
மழை பெய்யும்... மகிழ்ச்சியில்
நடனமாடி மழை பெய்யும்
இரண்டு இதயங்கள்
இணையும் அப்படித்தான்
நான் இரவில் நிலவினைப்
பார்க்கிறேன்
என் வாழ்வு உன் கையில் அன்பே
என் இமைகளில் நட்சத்திர மின்னல்
கனமழையின் போது உன் வருகை
கனவுலகிலும் பூத்துக் குலுங்கும்
மழை பெய்யும்.. மகிழ்ச்சியில்
நடனமாடி மழை பெய்யும்
இரண்டு இதயங்கள்
இணையும் அப்படித்தான்
(அண்மையில் இந்த பாடல் மிகவும் ஒலிக்கிறது... கேட்டு மகிழுங்கள் - மறைந்த உஸ்தாத் ரஷித் கான் குரல். சந்தேஷ் சாண்டில்யா இசை)

No comments:

Post a Comment