கோஹ்ரா (1964) திரைப்படத்தில்
"யே நயன் டரே டரே யே ஜாம் பரே பரே" என்றொரு பாடல்.
தமிழில் பிரதிபலிப்பு: பாலசாண்டில்யன்
நாளை யாரறிவார்
-----------------------------
பயத்தில் விழிக்கும் கண்கள் - மது
நிரம்பிய கண்ணாடிக் கோப்பைகள்
இன்னும் சற்று பருகுகிறேன் அன்பே
இதயக் காதலில் மேலும் உருகுகிறேன்
நாளை பற்றி யாருக்குத் தெரியும் - இந்த நாளின் இரவில் அச்சமின்றிருப்போம்
எனை துணிவில் வாழ விடுங்கள்...
இரவும் நிலவும் அழகானது
அதைவிட இனியவளே நீதானே அழகு.. உனைவிட அழகானது உந்தன் காதல்
அது உனக்கே தெரியாது...
ஒருநாள் தெரிந்து விடுமோ என்று
பயத்தில் விழிக்கும் கண்கள் - மது
நிரம்பிய கண்ணாடிக் கோப்பைகள்
இன்னும் சற்று பருகுகிறேன் அன்பே
இதயக் காதலில் மேலும் உருகுகிறேன்
வாழ்வின் மகிழ்ச்சி காதலில் தான்
ஆனால் இந்த மகிழ்ச்சி தான் சில
துக்கங்களைக் கொடுக்கின்றன
நான் தோல்வியை சில சமயம்
ஒப்புக் கொண்டாலும் நிச்சயம்
ஏற்கவில்லை நீயதனை கண்ணே.. அந்த
பயத்தில் விழிக்கும் கண்கள் - மது
நிரம்பிய கண்ணாடிக் கோப்பைகள்
இன்னும் சற்று பருகுகிறேன் அன்பே
இதயக் காதலில் மேலும் உருகுகிறேன்
No comments:
Post a Comment