Monday, July 21, 2025

அம்மா அம்மா அகிலம் நீயே அம்மா

 அம்மா அம்மா அகிலம் நீயே அம்மா

நீ எத்தனை அறிவானவள்
நீ எத்தனை அழகானவள்
அன்பானவள் நீ அம்மா
என் அம்மா என் அம்மா
இவ்வுலகம் முட்காடு நிறைந்தது
எனக்கு நீ தானே பூப்பாதை அம்மா
அன்பானவள் நீ அம்மா
என் அம்மா என் அம்மா
துக்கம் நிறைந்த உன் கண்கள்
தூக்கம் இன்றி நாளும் மலர்ந்திருக்கும்
நான் துயில உனது விழி ரோஜா
வாடாது மலர்ந்திருக்கும்
நீ உறங்கிடாத தியாகத்தில் தானே
என் உடல் வளர்ந்திருக்கும்
நீ எத்தனை அறிவானவள்
நீ எத்தனை அழகானவள்
அன்பானவள் நீ அம்மா
என் அம்மா என் அம்மா
உனக்கென்று ஏது உணர்வுகள்
உண்டு அம்மா
நான் சிரித்தால் நீ சிரிப்பாய்..
நான் அழுதால் நீ அழுவாய்
என் சிரிப்பும் அழுகையும் மட்டுமே
உன் அகிலம் என்பாய்
என் தியாக தீபமே சிரித்திடுவாய் அம்மா
அம்மா குழந்தைகளின்
உயிர் தானே என்றும்
அதிர்ஷ்டம் உள்ளவருக்கு
அம்மா இன்றும் என்றும்
அழகானவள் அன்பானவள் சகலமும் அகிலமும் அவளே
நீ எத்தனை அறிவானவள்
நீ எத்தனை அழகானவள்
அன்பானவள் நீ அம்மா
என் அம்மா என் அம்மா
- Dr. Balasandilyan...

No comments:

Post a Comment