Na Sabooth hai என்ற சுஃபி கானம் பலமுறை கேட்டு மனம் நெகிழ்ந்து அதன் சாறு பிழிந்து தர விழையும் முயற்சி இது...:
நீயிருக்கிறாய் எனும்
ஆதாரமோ சான்றோ விவாதமோ
நீயுமொரு குற்றவாளி என்று
சிலர் சொல்லக்கூடும்..
ஆனாலும் உந்தன் மேன்மை மகத்துவம் அருள்
என்னுடன் தான் உள்ளன என்பதை
எண்ணி வியக்கிறேன்
அதில் மெய் சிலிர்க்கிறேன்.
(நீயிருக்கிறாய்)
எனது தயார்நிலையில் ஏற்பாட்டில்
எச்சரிக்கையில் கவனத்தில்
குறையிருக்கலாம்,
எனினும், உந்தன் கருணையிலும்
ஆசியிலும் எக்குறையுமில்லை.
(நீயிருக்கிறாய்)
உன்னிடமிருந்து
யார் என்னை விலக்கிடக் கூடும்.
நான் பசி தாகம் எனில் நீ தானே உணவு நீர்
எனும் வளம்...மூலம்..
நான் அவற்றைத் தணித்துக்
கொள்வதும் உன் மூலம்.
(நீயிருக்கிறாய்)
உன் பெயர் என்னவோ
மிக மிகச் சிறியது.
உனை விவரிப்பது உணர்வது புரிந்து கொள்வது என்பதை
விவரிக்க முடியாத
எல்லைகளுக்கப்பாற்பட்டதுவே
உன் சிறப்பு. பெரும் பிரமிப்பு.
(நீயிருக்கிறாய்)
தமிழில் முயற்சி:
பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment