Monday, July 21, 2025

Tu jahan chali ja in Tamil

 நீயெங்கே எங்கே சென்றாலும்

எந்தன் நிழலும் கூட வருமே...
எந்தன் நிழலும்...
எந்தன் நிழலும் கூட வருமே...
எனை நீ நினைத்து ஏங்கி
சிந்திடும் உந்தன் கண்ணீர்.. அதை
நிறுத்தி மறைக்கும் எந்தன் விழி நீர்
எங்கெல்லாம் நீ நின்றாலும் எந்தன் நிழலும் கூட வருமே...
( நீயெங்கே)
சோகமாய் நீ இருந்தால் நானும்
சோகம் கொள்வேன் அன்பே
நேரில் வா வராமல் போ... உன்னருகே நானிருப்பேன்..
எங்கு நீ நகர்ந்தாலும்
எந்தன் நிழலும் கூட வருமே...
(நீயெங்கே)
நானுனைப் பிரிந்து சென்றாலும் சோகம் வேண்டாம் எந்தனன்பே..
எந்தன் காதல் நினைவு வைத்து
இமைகளை மூடாதே அன்பே...
எத்திசை நீ சென்றாலும் எந்தன்
நிழலும் கூட வருமே...
(நீயெங்கே)
எந்தன் துக்கம் உந்தனதுவாய்
நாளும் கலந்தே தானிருக்கும்.
காதல் தந்து விட்டேனே யுகம் யுகமாய் வருவேனே
எத்தனை ஜென்மம் என்றாலும்
எந்தன் நிழலும் கூட வருமே...
(நீயெங்கே)
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment