Monday, July 21, 2025

Tamil Ghazal

 Jhuki Jhuki Si Nazar

- Popular Ghazal influence
குனிந்து தரை பார்க்கும் உனது
கண்களில் அமைதியில்லையே
எத்தனை அடக்கிட முயன்றாலும்
என்மீது காதல் உள்ளத்தில்
எழுகிறதே! அது தெரிகிறதே!
(குனிந்து)
இதயத்தின் இளந்துடிப்பை
எண்ணிப்பார்- உனது
இதயம் போல எனதும்
அமைதியற்றதா கண்டு சொல்!
மலர்கின்ற இளங்காதல்
மாறுகிற தருணம்
மனதின் ஏக்கம்
அந்த நொடிக்குத் தானே சொல்!
எத்தனை அடக்கிட முயன்றாலும்
என்மீது காதல் உள்ளத்தில்
எழுகிறதே! அது தெரிகிறதே!
(குனிந்து)
நீயிருக்கும் நம்பிக்கையில்
உலகையே நிராகரிக்கிறேன்
உனக்கும் உன்மீது நம்பிக்கை
உள்ளது தானே சொல்!
எத்தனை அடக்கிட முயன்றாலும்
என்மீது காதல் உள்ளத்தில்
எழுகிறதே! அது தெரிகிறதே!
குனிந்து தரை பார்க்கும் உனது
கண்களில் இப்போது
அமைதி வந்தது தானே!?
அது தெரிகிறதே!!
- தமிழில்: பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment