Monday, July 21, 2025

Aap jinki kareeb hote hain - what a beautiful number

 Aap jinki kareeb hote hain - what a beautiful number

Pankaj Udhaas Ghazal influence:
யாருக்கு நீ நெருக்கமோ
அவர் மிக அதிர்ஷ்டசாலி
யாருடன் நீ முகச் சுருக்கமோ
அவர் மிக துர்பாக்கியசாலி
நான் உன்னிலிருந்து பிரித்து
எனைப்பிறராக உணரும் நாள்
மோசம் மிக மோசம் - அது
மரணமெனை நெருங்கும் நாள்
என்னைச் சந்தித்த பின் நான்
உன்னை சந்தித்தேன் எனினும்
எவருக்கு நீ வாய்த்திடுவாயோ
அவர் மிக அதிர்ஷ்டசாலி
யார் அநீதி செய்து உன்னிடம்
மன்னிப்பு கோரவில்லையோ அவர்
மனது அலாதியானது கொடூரமானது
அன்று நான் மிக பாக்கியசாலி
(இசைக்குள் அமர்த்துவது சவால்)
- பாலசாண்டில்யன்
See insights and ads
Like
Comment
Send
Share

No comments:

Post a Comment