Monday, July 21, 2025

மீண்டு பிறப்பேனோ என் தாயே

 மீண்டு பிறப்பேனோ என் தாயே

மீண்டும் பிறப்பேனோ உன் சேயாய் - உன்
அன்பின் வண்ணம் முழுவதுமறிய
அணைப்பின் வாசம் உணர்ந்து தெளிய
(மீண்டு)
உயிர் நான் உடல் நீயென உயிர்த்து
உனையே என் தாயாய் அடைய
காலன் தடுத்தாலும் காலம் மறைந்தாலும் - உன்
காலடியில் கிடக்க காலமெலாம் சுகிக்க
(மீண்டு)
பாசம் காட்டும் தவிப்பே பரிதவிப்பாய்
ஆக்கப் பிறந்தவனாய் ஆக்கம் அறிந்தவனாய்
ஞானம் கிடைத்தவனாய் யோகம் தெளிந்தவனாய்
மலராக மணமாக ஒளியாக உன் நிழலாக
(மீண்டு)
(ஒவ்வொரு வரி முடிவிலும் மீண்டு பிறப்பேனோ என்று பாடிப் பார்க்கலாம்)

No comments:

Post a Comment