Monday, July 21, 2025

கண்ணாடி பலவிதம்

 கண்ணாடி பலவிதம்

- பாலசாண்டில்யன்
உள்ளே நுழைந்து அமரும் போது
சலூன் கண்ணாடிகள்
கண்ணாடிகளாக இருக்கின்றன.
நாற்காலியில் உட்கார்ந்து
நாலாப்புறமும் பார்த்துப் பார்த்து முடிதிருத்தி
சாலை நுழையும் தருவாயில்
கண்ணாடி பல கதைகள் சொல்கின்றது.
புதிய ஒருவனாக என்னை
அனுப்பி வைக்கிறது
பூரிப்பில் வீடு திரும்புகிறேன்.
வீடு திரும்பியதும்
அது கண்ணாடியாக முடிவதே இல்லை.
வீட்டில் தெரியும் கண்ணாடி எப்போதும் சுமாராகவே காட்டுகின்றது.
ஏனிந்த (ஏ)மாற்றம்....
நாம் வாங்கும் கண்ணாடிகள்
விலைமலிவு தான் என்பதால்
அவை
பொய் பிம்பம் காட்டுகின்றதோ ?

No comments:

Post a Comment