ஓ என்னன்பே... நீயின்றி நான்
உன்னுடன் பேசும் மொழியறியேன்
உனைத் தேடும் வழியறியேன்
உன் ஞாபகம் வந்து வாட்டிடுதே...
ஓ என்னன்பே... நீயின்றி நான்
இராப்பகலை எப்படிக் கழிப்பேன்
உன் முன்பு எப்படி ஆறுதலடைவேன்
உன் ஞாபகம் துரத்திக் கொல்கிறதே
கரு மேகங்கள் திரண்ட வானில்
நீயிலாதும் மழை பெயும் இளவேனில்
குடையாலே மழை நிறுத்த வழியறியேன்
உன் போல் மழையின் மொழியறியேன்
ஒ என்னன்பே நீயின்றி நான்
இராப்பகலை எப்படிக் கழிப்பேன்
உனதருகே எப்படி இடம் பிடிப்பேன்
உன் ஞாபகம் எனை ஆட்கொண்டதே..
- பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment