Monday, July 21, 2025

தீயின்றி காதல் இருந்ததில்லை

 தீயின்றி காதல் இருந்ததில்லை

நீயின்றி நானும் வாழ்வதில்லை
என்ன சொல்லி புரிதல் செய்ய
என்னிதயம் பணி புரிதல் செய்ய
எனதன்பு சொன்னால் புரியுமா
நீயே எந்தன் வாழ்வு தெரியுமா
உன்னிதயத் துடிப்பு நான் தான்
உனது பாதை எனது பயணம்
எளிதாய் இருந்திருக்கும் வாழ்வு
என் விழிகள் திறக்காதிருந்தால்
என் வாழ்வு இனி நீ தான் நம்பு
இன்னும் ஏன் கண்ணால் பல அம்பு
பாதை மாறிய பயணம் எனது
பாவை உன்னை சுற்றுது மனது
நீயே ஆனது எந்தன் புது உலகு
உன் பார்வை என் முகத்தில் அலகு
பணிந்தேன் உன் சம்மதம் கேட்டு
பரிவாய் இனி இன்முகம் காட்டு
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment