அழகிய அயோத்தி நகரினிலே
அற்புத ராமன் எழுந்து நின்றான்
பயபக்தியுடன் வழிபடவே எழில்
பாலராமன் சிரித்து நின்றான்
வேதமந்திர கோஷத்துடன் இனிதே
வில்லேந்தி ராமன் காட்சி தந்தான்
தங்கம் வைரம் ஜொலிஜொலிக்க
திருவாபரணக் கோலம் கொண்டான்
வண்ண மலர்களின் நடுவே
அண்ணல் ராமன் மிளிர்கின்றான்
சகல வாத்தியம் முழங்கிடவே
அகில உலகைக் காக்க வந்தான்
மலர் மழை பொழியும் தருணம்
சிலை ரூபமாய் சிலிர்த்து நின்றான்
பலர் வந்து சூழப் பாங்குடன்
பரிபாலன மூர்த்தி காட்சி தந்தான்
கற்கப்பட வேண்டியவன் ராமன்
கலியினைக் காக்கவே வந்து நின்றான்
பாரினில் மக்களைப் பாலித்திடவே
பரிபூரணனாய் இன்று பரிமளித்தான்
- பாலசாண்டில்யன்

No comments:
Post a Comment